திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் மாணவ-மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் பள்ளிவாசலில் துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் பயின்று வருகின்றனர்.
இதில் 90 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8 ஆம் வகுப்பு முதல் காலேஜ் வரை ஒரு பிரிவாகவும் நடைபெற்று வருகிறது.
இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களை ஹதிஸ் ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.
மாணவர்கள் அதிகமாக இருப்பதால் முன்று பிரிவுகளாக பிரிக்க பட்டு பயிற்சியளிக்கின்றனர். இன்ஷா அல்லாஹ்.. 15-05-13 வரை பயிற்சி முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.