கண்ணியத்துக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன்திருமறையில்..
நான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான்.ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை! (அல்குர்ஆன்: 2:269)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமைநாள் வரும்வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்த தீங்கும் செய்துவிட முடியாது. (முஆவியா(ரலி) புகாரி 71)
கல்வி என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும் மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்துப் பிரித்துக் காட்டும். பல அம்சங்களில் இந்த கல்வியும் முக்கியமான ஒன்று.
மனிதன் சிந்திக்கவும் செயல்படவும், கண்டுபிடிக்கவும் ஆற்றல் தரப்பெற்ற அற்புதமானப் படைப்பு.
அவன் சிந்திக்கவும் செயல்படவும் தேவையானது முதலில் அறிவு. அந்த அறிவைப் பெற்றிட இறையருளால் அவன் நாட வேண்டியது கல்வியாகும்.
சரியான கல்வியைக் கற்கும் மனிதன் அதுதரும் அறிவைக் கொண்டு தனக்கென ஒருதனி அந்தஸ்தைப் பெறுகிறான்.
அந்த நல்லக் கல்வியை தனக்கும் பிறர்க்கும் பயன் தரும் வகையில் அம்மனிதன் செயல்படுத்தும் போது அவனது வாழ்க்கைத்தரம் இறையருளால் உயர்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்கிறது...
உலகக்கல்வி மார்க்கக்கல்வியென்று மக்கள் கல்வியை தரம் பிரித்து வைத்திருந்தாலும் மனித வாழ்க்கையின் அஸ்திவாரம்; மார்க்கக் கல்வியாக அமைய வேண்டும். அப்போது தான் இம்மை மறுமை வாழ்க்கை பாதுகாக்கப் பட்டதாக இன்ஷாஅல்லாஹ் அமைந்து விடும். இதனால் உலகக் கல்வியை கற்கக் கூடாதென்றோ கல்லூரி களுக்குச் சென்று பட்டம் பதவிகள் பெறக் கூடாதென்றோ நாம் சொல்வதாக யாரும் கருதி விடக்கூடாது.
பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும், உயர்கல்விகளும் கற்க வேண்டும். அதிலும் குறிப்பாக கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமியச் சமூகம் கல்லூரி படிப்பில் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உலக கல்வியே முக்கியமென்று கருதி சன்மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒரு நாளின் சிறு நேரத்தைக் கூட ஒதுக்காமல் வாழ்தல் கூடாது.
அதே சமயம் மார்க்கக் கல்வி கற்கிறோமென்ற பெயரில் வெறும் தியானம் செய்யும் ஒரு துறவியைப் போன்று ஆகி விடுதலும் கூடாது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட ஒ ரவழியை இஸ்லாம் எடுத்துறைக்கிறது. அதாவது உலகக் கல்வியும் வாழ்க்கையும் மார்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டதாக, மார்க்கக்கண் கொண்டே பார்ப்பதாக, சிந்திப்பதாக அமைதல் வேண்டும். ஏனெனில் உலகக் கல்வியை மட்டும் கவனம் கொள்ளும் பலர் இறைநம்பிக்கை விஷயத்தில் மூடநம்பிக்கைகளையே தங்களுக்குள் வளர்த்துக் வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.
ஆல்லது பகுத்தறிவாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இறைநம்பிக்கையை, கொள்கையை காயப்படுத்தும் வன்மம் கொண்டவர்களாகப் பேசி திரிவதைக் காண்கின்றோம். மார்க்கம் பேசும் பலரோ படைத்த ஏகநாயனின் அத்தாட்சிகளை சரிவரப் பார்க்காமல், சிந்திக்காமல் ஆய்வுகள் செய்யாமல் குறுகிய கண்ணோட்;டத்துடன் அல்லாஹ்வின் ஆயத்துகளை ஹதீஸ்களை அணுகி இந்த அழகிய மார்க்கத்தை ஒரு மதமாக சித்தரிக்கும் அவலத்தை நாம் காண்கிறோம்.
எனவே சரியான கல்வியைத் தேடுவதும் அதைக் கற்பதும் மனிதர்களின் கடைசி நிமிடம் வரை கடமையாக உள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்:
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.(அல்குர்ஆன்: 39:9)
குருடனும் பாhவையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக( அல்குர்ஆன்: 6:50)
என்றெல்லாம் உதாரணங்களைக் கூறி கல்வி ஞானம் வழங்கப்பட்டவர்களுக்கு தனி அந்தஸ்து உள்ளதை அல்லாஹ் விளக்குகிறான்.
எழுத்தறிவு இறைவனின் அருள்:
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கல்வி ஞானம் என்பது தங்களைப் படைத்த இறைவன் புறத்திலிருந்தே கிடைத்ததாகும் என்பதை மனித சமுதாயம் தன் துவக்கத்திலிருந்தே அறிந்தும் உணர்ந்தும் வைத்துள்ளது. அந்த அறிவின் துணையின்றி தனது வாழ்க்கைப்பாதையை சரியான முறையில் செப்பனிட முடியாது என்பதை மனித சமுதாயம் தெளிவாகவே உணர்ந்து வைத்துள்ளது. அதனால் தான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற வாக்கை மனித சமுதாயம் தொன்றுதொட்டே கூறி வருகிறது. இதையே தான் இறைமறை திருக்குர்ஆனும் எழுத்தறிவு இறைவனின் அருள் என்றே கூறுகிறது. முதன் முதலாக அருளப்பட்ட இறைவசனமே கல்வியைப்பற்றியும், மனிதன் அறியாததையெல்லாம் அவனுக்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் தான் கற்றுக் கொடுத்தான் என்பதையும் கூறுகிறது.
(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான் (அல் குர்ஆன்: 96 : 1-5)
படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டே கல்வியறிவை துவங்கச் சொல்கிறது திருமறை.
தான் எதிலிருந்து படைக்கப்பட்டோம். தன்னைப் படைத்த இரட்சகன் எத்தகைய கண்ணியமிக்கவன் என்ற முதலும் முக்கியமுமான அடிப்படையான கல்வியைப் பெற்றுக் கொள்ள மனித சமூகத்தை இம் மாமறை அழைக்கிறது.
மனிதனுக்கு எழுதுகோலையும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அதனுடன் மனிதன் அறியாத விஷயங்களை யெல்லாம் மகத்தான அல்லாஹ் தான் கற்றுத் தந்ததைக் கூறுகிறான். எனவே திருமறை திருக்குர்ஆன் அருளப்பட்டது மனிதர்கள் கல்வி ஞானம் பெறுவதற்கேஎன்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிமார்கள் அனுப்பப்பட்டதும் கல்வி கற்பிப்பதற்கே! உங்களுக்கு உங்களிலிருந்தே தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்),அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்த வற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார். (அல்குர்ஆன்: 2:151)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கல்வி கற்பிக்கவே அனுப்பப் பட்டார்கள். இவ்வசனத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்றுக் கூறும் போது மூன்று பண்புகளைச் செய்ய அவர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1. வசனங்களை கூறுதல்: 2. வேதத்தைக் கற்றுக் கொடுத்தல். 3. ஞானத்தைக் கற்றுக் கொடுத்தல். இம்மூன்று சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.
முஸ்லீம் சமுதாயம் இவ்விஷயத்தில் கவனமற்றிருக்கிறது. மறையும் மாநபியும் அருளப்பட்டது யாருக்கோ எவருக்கோ என்ற கவனமற்ற தன்மை முஸ்லிம்களிடமே குடி கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அல்லது மார்க்க விஷயத்தைவிட உலக பலாபலன்களே மேலானது என்ற எண்ணப் போக்குக்கு முக்கியத்துவம் தருவதனால் மறுமை வரை பயன்தரும் மார்க்கக் கல்வியில் தானும் திறனின்றி பிறர்க்கு எத்தி வைப்பதிலும் சுரத்தின்றி வாழ்ந்து வருகிறது. இது உடனடியாக களையெடுக்கப்பட வேண்டிய தன்மையாகும்.
கல்வி என்பது விழிப்புணர்வை எற்படுத்துவதாக இருத்தல் வேண்டும். தொலை தூர நோக்கோடு மனிதர்களை நல்வழிப்படுத்துவதாகஇருத்தல் வேண்டும். சரியான நிலையா பயன்தரும் இலக்கைச் சுட்டிக் காட்டவதந்காக இருக்க லேஒ;டும். எந்த நிலை வந்தபோதும் அந்தப் பயன்மிக்க இலக்கை அடைவதை உயிர்மூச்சாகக் கொள்ளும் பக்குவத்தை மனிதர்களுக்கு தரும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.
இன்றைக்கு நாட்டில் இருக்கும் மேதைகள், மெத்தப்படித்த வர்கள், ஜீனியஸ்கள் என்றெல்லாம் போற்றப்படும் பெருப்பாலானோர் எல்லாம் மூடநம்பிக்கைகளையும், களவுச் சிந்தனைகளையும் தற்கொலை எண்ணங்களையும், களவு சிந்தனைகளையும் மக்களிடம் கடை பரப்பகின்றனர். அவர்கள் கற்ற கல்வியைக் கொண்டு தாங்களும் விழிப்புணர்வு அடையாமல் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமல் தடுமாறுவதைப் பார்கின்றோம்.
வெளிச்சமும் விழிப்புணர்வும் தரும் கல்வி எதிலுள்ளது? அகமும் புறமும் பலம் தரும் கல்வி எதிலுள்ளது?, தான் அருளிய திருமறையில் உள்ளது என்பதை அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான்.
இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களை கொண்டு செல்வதற்காக அவனே தனது அடியார் மீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 57:9)
அஞ்ஞான இருள் அறியாமை என்ற இருள் பாவங்கள் என்றும் இருள்களிலிருந்தெல்லாம் மனித இனத்தை வெளியேற்றி உண்மை என்ற ஒளியின் பக்கம் கொண்டு செல்வதற்காகவே தனது நபியின் மீது சான்றுகளை இறக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை அளிக்க நாடுகின்றானோ அவருக்குத் தன் மார்க்கத்தைப் பற்றிய ஞானத்தை வழங்குகின்றான். (அறிவிப்பவர்: முஆவியா(ரலி) புகாரி முஸ்லீம்)
மார்க்க அறிவும், ஞானமும் எல்லா நன்மைகளுக்கம் ஊற்றாக விளங்குவது வெளிப்படை. எவருக்கு மார்க்க அறிவு கிடைத்து விட்டதோ அவருக்கு இம்மை மறுமை பேறுகள் அனைத்தும் கிட்டடி விட்டன என்று பொருள். அதனைக் கொண்டு அவர் தம்மைதாமே சீர்திருத்திக் கொள்வார். இன்னும் பிறமக்களின் வாழ்க்கையையும் சீர்திருத்த கொள்வார்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள், எவர் கல்வி பெறுவதற்காக பயணம் புரிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை அல்லாஹ் இலகுவாக்கித் தருவான். எவர்கள் அல்லாஹ்வின் ஏதேனுமோர் இல்லத்தில் (மஸ்ஜித்) ஒன்றுகூடி இறைமறையை ஒதுகின்றார்களோ அதில் விவாதங்களும் ஆய்வுகளும் நடத்துகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இறைநம்பிக்கையினால் கிட்டும் அமைதி இறங்குகின்றது. இறைக்கருனை அவர்களை அரவனைத்துக் கொள்கிறது. வானவர்கள் அவர்களை அல்லாஹ் தன் வானவர்கள அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களை அல்லாஹ் தன் வானவர்களின்அவையில் நினைவு சுநுகின்நான். எவனை அவனது செயல் பின்தள்ளி விடுகின்றNh அவனது குலச்சிறப்பு அவனை முன்னேற்றத்துக்குகச் கொண்ட சென்று விடாது. (அறிவிப்பவர்: அபூபக்கர்(ரலி) முஸ்லிம்)
ஒரு மனிதன் தன்னிடம் ஒரு கல்விக் கருவுலத்தையே வைத்திருந்தாலும் சரி, மிகப் பெரும் குடும்ப பாரம்பரியமும், சிறப்பும் பெற்றிருந்தாலும் சரி அவன் மார்க்கக் கல்வி கற்று அதன்படி செயல்படவில்லைடியனழல் அவைகள் எதுவும் வேநு எந்தச் சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவைகள் அவனுக்குப் பலனளிக்காது. அவனை உயர்த்தக் கூடியது செயல்மட்டுமேயாகும்.
அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்த நபிமொழியில் ஒரு புறம் மாhக்கக் கல்வி பயில்வருக்கு நற்செய்தி அளித்திருப்பதுடன் மற்றொருபுறம் ஓர் அபாயத்தைக் குறித்தும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதாவது மார்க்கக் கல்வி கற்பதன் நோக்கம் அதன்படி செயலாற்றுவதேயாகும்.
(கற்றுக் கொள்வதற்கு) வெட்கப்படுபவனும், (தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவனும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக் கொள்ள மாட்டான். ஆகவே எனதருமை முஸ்லிம் சமுதாயமே! மார்க்கக் கல்வி நம்மை படைத்த இரட்சகனின் மேலான அருட்கொடையாகும். இம்மை மறுமை நல்வாழ்விற்கு துனை செய்வதாகும். அதைப்பற்றிப் பிடிப்பது நம் உயிரைவிட மேலானதாகும்.
துபை-tntj