கடந்த 10.03.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக பெண்கள் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் தக்வா பள்ளியில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, சரியாக மாலை 05.30மணிக்கு மாவட்ட தாயீ அனஸ் நபீல் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் என்ற தலைப்பில் சிறப்புரையுடன் பயிற்சி முகாம் தொடங்கியது.
tntjவின் நோக்கம் பற்றியும் இனி செய்ய வேண்டிய தாவா பணிகள் குறித்தும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார், அதன் பிறகு மாலை 06.45 முதல் 07.15 வரை சிறுவர்கள் ஆசிக், ஹாஜி, மற்றும் பைசல் ஆகியோர் சிரபுரையற்றினர்கள்
அதன் பிறகு 07.15 மணிமுதல் 8.00 வரை சகோதரி ரம்ஜான் பேகம் அவர்கள் இறைவனை விட்டு படைபினங்களை வணங்ககூடாது என்ற தலைப்பில் மிகவும் உருக்கமாக எடுத்துரைத்தார்கள்,
பெண்கள் மிகவும் ஆவலுடன் அறிந்து கொண்டர்கள் கடைசியாக சகோதர் தாரிக்கின் முடிவுரையுடன் தர்பியா முகாம் இனிதை நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியை நல்லபடி ஆக்கி தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும். இதில் 45 பெண்கள் கலந்து கொண்டனர்




.jpg)