வழிகேட்டிற்குள் வழிகேடு.
ஜின்னையும்இமனிதனையும் என்னைவணங்குவதற்காகவே தவிர(வேறு எதற்காகவும்) நான்படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)
வழிகேடுகளின் மொத்த உருவமாக திகழ்பவா்கள் அந்த வழிகேடுகளுக்குள்ளாக மீண்டும்இமீண்டும் வழிகேடுகளை செய்வதை அவதானித்திருப்போம்.
அந்த வகையில் இஸ்லாத்தில் இல்லாத கப்ரு வணக்கத்தை செய்யும் பரேலவி மதத்தினா் தங்களை ஒரு முஸ்லிமைப் போல் காட்டிக் கொள்வதும்இஅவர்களுக்கெதிரான ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் நாங்கள் கப்ருகளை வணங்கவில்லை ஸியாரத் தான் செய்கிறோம் என்று மழுப்பல் பதில்கள் சொல்லிக் கொண்டு அலைவதையும் நாம் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யைநொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.(இறைவனைப் பற்றி) நீங்கள்(தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (அல்குர்ஆன் 21 : 18)
கப்ரு வணக்கத்தை ஸியாரம் என்று வா்ணித்து வழிகேட்டிற்கு நபிவழிச் சாயம் புசுவதையே மேற்கண்ட வசனம் வண்மையாக கண்டிக்கிறது.
ரஜினியின் பிறந்த நாளும்,நாகூர் தர்காவும்.
நபிகள் நாயகம்(ஸல்)அவா்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதையே தடுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களையும் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தக் கப்ரு வணங்கிகள் வழிகேட்டின் உச்ச கட்டமாக வழிகேட்டிற்குள் இன்னொரு வழிகேடாக ரஜ்னி காந்திற்கும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்கள்.
அண்ணிய பெண்களுடன் வெக்கம்இமானம் ஏதுமின்றி கட்டிப்பிடித்து ஆட்டம் போடும் ஒருவனுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கூட்டம்.
மீலாதுன் நபி விழாவை நாம் எதிர்க்கும் போது கேட்கும் கேள்வி நமது வழிகாட்டி நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாராட்டி அவா்களின் பிறந்த தினத்தை கொண்டாடினால் தவறா?
செய்யும் வழிகேட்டிட்கும் ஒரு வக்காலத்துக் கேள்வி வேறு.
ஒரு வார்த்தைக்காக நபியவா்கள் நமது வழிகாட்டி என்பதற்காக நபியவா்களை புகழ்ந்து பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள்.அப்படியானால் ரஜ்னி காந்த் யார்?
இமய மலையும்,நாகூா் தர்காவும்.
இஸ்லாத்தின் பெயரால் செயல் படும் இந்த யுத கலாச்சார,இந்துத்துவ ஏஜன்டுகளுக்கும் இமய மலைக்கும் உள்ள தொடர்பு இப்போது தெரிகிறதா?
இமய மலையில் இருப்பதாக ரஜ்னிகாந்த் நம்பிக் கொண்டிருக்கும் பாபா என்ற கற்பனை தெய்வத்திற்கும் அவ்லியா என்று நாகூறில் போற்றப் படுபவரும் இரு தரப்பாருக்கும் ஒருவர்தான்.
அவா் வேறு,இவா் வேறு என்பது இந்த வழிகேடர்களுக்குள் இல்லை.
ரஜ்னி காந்தின் பாபாவையும் இவா்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவா்களின் நாகூர் தெய்வத்தையும் ரஜ்னி காந்த் ஏற்றுக் கொள்கிறார்.
கிருத்தவா்களை அடியொட்டி அவா்களின் வழியில் செல்லும் இவா்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள். (புகாரி (3456))
நன்றி :
rasminmisc