FLASH NEWS : coming soon ......... -

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்! எருமைப்பட்டி குளத்தில் முஹம்மது தவ்ஃபீக் சாதனை!


திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி ஆண்டு படிப்பிற்காக ஒரு ப்ராஜக்ட் செய்ய நினைத்த முஹம்மது தஃபீக் அதை ஒரு சாதனையாக செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.

தரையிலும் தண்ணீரிலும் ஒடும் பஸ் மற்றும் சைக்கிள்கள் தொழில்நுட்பத்தில் முன்னேரிய நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கின்றது எனவே‘எரவாஞ்சேரியில் இருக்கும் நாம் புதுமையாக தண்ணீரிலும் தரையிலும் ஓடும் ஸ்கூட்டரை தயாரிப்போம்’ என முடிவு செய்த முஹம்மது தவ்ஃபீக் 6 மாத காலத்தில் தனது இந்த கனவை நினைவாக்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு சொந்தான எம்எய்ட்டி பைக்கை வைத்து இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் தயாரித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூபாய் 6 ஆயிரம் மட்டும் தான்!

தண்ணீரில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை தரையிலும் ஓட்டிக்க கொள்ளலாம்.

தனது கண்டுபிடிப்பை எருமைப்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட்டிக்காட்னார் முஹம்மது தஃபீக்!


இவரது இந்த கண்டு பிடிப்பை பற்றிய செய்தி சன்நியுஸ், கலைஞர் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் தினகரன் தினதந்தி போன்ற அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடதக்கது.

இவரது இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

‘நம்ம ஊர்ல இருந்துகிட்டு என்னத்த செய்யமுடியும் என தங்களது இயலாமைக்கு வேறு பெயர் சூட்டிக் கொள்ளாமல் சாதனை செய்ய பணமோ வசதியோ நாம் வசிக்கும் ஊரோ ஒரு தடை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

முஹம்மது தஃபீக் அப்படி நினைத்திருந்தால் அவரது இந்த கண்டுபிடிப்பு வெளிவந்திருக்காது. தண்ணிடம் இருந்த பழைய பைக், வெறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அருகில் உள்ள குளம், இதுவே முஹம்மது தஃபீக் சாதனைக்கு போதுமானதாக இருந்துள்ளது.

தனது இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளதாக முஹம்மது தஃபீக் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

நமது சமுதாய மாணவர்களின் இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும்.


நன்றி :tntj.net

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved