FLASH NEWS : coming soon ......... -

about me


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!
அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த திருவாரூர் கிளையின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். அதன் கிளையான திருவாரூர் கிளையின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! இன்னும் பல தகவலோடு திருவாரூர் கிளையின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக!
அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved