கடந்த 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக குடும்பவியல் பெண்கள் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் E&S welcome city மண்டபத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, சரியாக காலை 10.30 ஆரம்பம் ஆனது இதில் இறையச்சம் என்ற தலைப்பிலும் , குழந்தை வளர்ப்பு , கணவன் மனைவி உறவு , பெற்றோகள் , முதியவர்கள் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது இதனை அந் நூர் மதரசா மாணவிகள் சிறப்பாக நடத்தி கொடுத்தனர். வருகை தந்த அனைவர்க்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் 200 பெண்கள்களுக்கு மட்டும்தான் திட்டம் இட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தோம் ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் கிட்டதட்ட 400 பெண்களுக்கு மேல் வந்து இருந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சி பெண்களை கொண்டே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கும் நிறைவடைந்தது .இந்த நிகழ்ச்சியை நல்லபடி ஆக்கி தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.
.jpg)
.jpg)
