தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக 07.09.2013 அன்று மாலை 07.15 மணி முதல் 10.20 மணி வரை மஸ்ஜித் தக்வா பள்ளியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
பொது கூட்டம் பெரிய பள்ளிவாசல் தெருவில் நடத்துவது என்று போஸ்டர் , நோட்டீஸ் ப்ளெக்ஸ் போன்ற ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தது காவல் துறை கேட்டுகொண்டதன் பெயரிலும் அன்று மலை என்பதாலும் பள்ளியில் வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் M.S சுலைமான் அவர்கள் இறை கொள்கையை பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் கபூர் மிஸ்பாஹி அவர்கள் தவ்ஹீதும் கடந்து வந்த பாதையும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் . சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.