FLASH NEWS : coming soon ......... -

வலைகுடா அரசியல் புரட்சிகளுக்கு அமெரிக்காதான் காரணமா?

(வலை குடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அறிஞர் பி.ஜெ அவர்கள் கொடுத்த பதிலை எழுத்து வடிவில் தருகிறோம்.வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.)

இன்றைக்கு வலைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சிகளுக்கு மேற்கத்திய நாடுகளின் சதிதான் காரணம் என்று பலர் நினைப்பதுடன்,கேள்வியும் கேட்கிறார்கள்.

வலைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைப் பொருத்தவரை மேற்கத்தய நாடுகளின் சதி கண்டிப்பாக இருக்காது என்பதே தெளிவு.இதற்கு சில காரணங்களை நாம் சொல்ல முடியும்.

ஏன் என்றால் மேற்கு நாடுகளின் சதியின் காரணமாகத்தான் வலைகுடா நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அது தவறாகும். ஏன் என்றால் மக்கள் எழுச்சியை சதியின் மூலம் ஏற்படுத்த முடியாது என்பதே இதற்காக காரணம்.

இன்னும் சொல்லப் போனால் தற்போது வலைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் புரட்சிகள் அனைத்தும் மேற்கு நாடுகளுக்க மரண அடி கொடுக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு சில மண்ணர்களை கைக்குள் வைத்துக் கொண்டு அரபு நாடுகளை ஏமாற்றி வந்த துரோக ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் இந்தப் புரட்சிகள் வெடித்திருக்கின்றன.

பொம்மை ஆட்சிகள் இனிமேல் இருக்க முடியாத அளவுக்குத்தான் தற்போது மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் எல்லாம் இது போன்ற பொம்மை ஆட்சியாளர்களை அதிபர்களாக வைத்துக் கொண்டுதான் அரபு தேசத்தின் எண்ணை வளத்தை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் இது போன்ற நிலை இனி மாறும் வாய்ப்பிருக்கிறது.

மக்கள் ஆட்சி ஒரு நாட்டில் இருக்கும் போது அந்த நாட்டு மக்கள் விரும்பினால் தான் அந்த நாட்டின் எண்ணை வளத்தை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுக்க முடியும், அத்துடன் மக்கள் ஆட்சி நடந்தால் அமெரிக்கா போன்ற நாடுகள் எந்தக் காரணம் கொண்டும் சட்டாம் பிள்ளை போன்று நடக்க இயலாது.

இது போன்ற மக்கள் எழுச்சி அமெரிக்க போன்ற நாடுகளுக்கு எதிராக இருக்குமேயேழிய சாதகமாக இருக்க வாய்ப்பில்லை.

உதாரணமாக எகிப்தின் அதிபராக இருந்த ஹொஸ்னி முபாரக் அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தவர். அவரின் ஆட்சி பரிக்கப்பட்டதினால் அமெரிக்காவிற்கு இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது.இப்படி தனக்கே எதிரான ஒரு காரியத்தை அமெரிக்கா செய்யுமா என்றால் செய்யவே செய்யாது.

அங்கு நடந்தது என்ன?

எகிப்து போன்ற மக்கள் புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் ஆட்சியாளர்களால் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.

பத்துப் பேராக இருந்தவர்கள் நூறாக, ஆயிரமாக, லட்சமாக மாறும் போது புரட்சி வெடிக்கத்தான் செய்யும் பொருத்திருந்தவர்கள் அந்த ஆட்சியாளர்களுக்கெதிராக கிளம்புவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தான் பயன்படுத்துவார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி, வருமை சுதந்திரமற்ற அடக்குமுறை ஆட்சி, அரசர்களின் டாம்பீகமான, சொகுசு வாழ்க்கை இது போன்றவற்றைப் பார்த்து மக்கள் கொதித்தெழுந்துள்ளார்களே தவிர சதியெல்லாம் கிடையவே கிடையாது.

சதித்திட்டம் போட்டு சில தலைவர்களை விலைக்கு வாங்க முடியுமே தவிர இது போன்ற புரட்சிகளை எல்லாம் உண்டு பண்ண முடியாது.

அத்தோடு இந்தப் புரட்சிகளுக்கெல்லாம் தலைவர்களே கிடையாது என்பதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

எகிப்தில் நடந்த புரட்சி, டியுனிஷிய புரட்சி தற்போது லிப்யா, ஓமான்>பஹ்ரைன் போன்ற நாடுகளில் நடந்து வரும் புரட்சிகள் எதற்கும் எந்தத் தலைவருமோ அல்ல எதிர் கட்சியுமோ காரணமில்லை. மக்கள் ஆட்சியாளரின் ஆட்சியை வெறுத்து போராட்டம் நடத்தினார்கள் அவர்களுடன் மற்ற கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

இது இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறதே தவிர சதியாக இருக்க வாய்ப்பில்லை.

அத்துடன் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கியமான விஷயம் புரட்சியினால் ஆட்சி மாறுகிறதே தவிர இஸ்லாத்திற்கும் இந்த புரட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புரட்சி செய்தவர்களிடமும் இஸ்லாம் இல்லை, நாட்டை ஆட்சி செய்தவர்களிடமும் இஸ்லாம் இல்லை. ஆட்சி மாறினால் இஸ்லாம் நிலை நாட்டப்படும் என்றெல்லாம் நினைப்பதற்கு வாய்ப்பில்லை.

சோற்றிற்கு கஷ்டம், வாழ்கை செலவுக்கு கஷ்டம் என்பதற்காகத்தான் புரட்சி வெடித்ததே தவிர இஸ்லாத்தை நிலை நாட்டுவதற்கு புரட்சி வெடிக்கவில்லை.

ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் ஒரு விதமாக மார்க்கத்திற்கு முரனாக செயல்பட்டார்கள், இவர்கள் இன்னுமொரு விதமான இஸ்லாத்திற்கு மாற்றமாக நடக்களாம்.

இது போல் மக்கள் புரட்சி வெடித்ததற்காக இஸ்லாமிய ஆட்சி வந்துவிடும் என்றெல்லாம் எண்ண முடியாது.

அதிகமான கஷ்டம் தரும் ஆட்சியாளரை நீக்கிவிட்டு, குறைவான கஷ்டம் ஏற்படும் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்ற நோக்கத்தில் இதை ஏற்படுத்தினால் அது அவர்களுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தலாம்.

நன்றி : rasminmisc
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved