மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அரும்மறையில் கூறுகின்றான்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 6:59)
இறையருளால் இஸ்லாமிய ஆண்டுக்கணக்கில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை நாமெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அடைய இருக்கின்றோம். இம்மாதத்தில் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் இஸ்லாம் காட்டித்தராத இஸ்லாத்திற்கு முரணான எண்ணங்கொள்வதும், அதற்கேற்ற காரியங்களைச் செய்வதுமாய் இருக்கின்றனர். அவைகளை மூட நம்பிக்கைகளாய் அவர்கள் கருதுவதில்லை. இதனால் இஸ்லாத்தை மற்ற மதங்களைப் போன்று ஒரு மதமாக ஆக்குவதோடு அது ஏக இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்ட தனித்துவமிக்க ஒரு வாழ்வியல் மார்க்கம் என்பதை முஸ்லீம்கள் உணரவும், உணர்த்தவும் தவறி விட்டனர். இது தங்களுக்கும்,பிற மக்களுக்கும் தலைசிறந்த சன்மார்க்கத்திற்கும் தாங்கள் செய்யும் அநீதி என்பதை ஏனோ? உணர மறுக்கின்றனர்.
நன்றி :dubaitntj