FLASH NEWS : coming soon ......... -

தவ்ஹீத் ஜமாத்தா? தக்லீத் ஜமாத்தா?


ஏக இறைவனின் திருப்பெயரால்… தவ்ஹீத் ஜமாத்தா? தக்லீத் ஜமாத்தா? இப்படி டைட்டில் இட்டு சிலர் அபாண்டமாக மெயில்களிலும் இணையதளங்களிலும் பரப்பி வருகிறார்கள். இப்படி பரப்பி வருகிறவர்கள் ஒரு காலத்தில் நம்மோடு இருந்து நம்முடைய கொள்கையை தெரிந்தவர்கள்தான்.

தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய அமைப்பு அதில் எந்த சமரசமும் கிடையாது என்பது இவர்களுக்கு மட்டுமல்ல உலகமறிந்த ரகசியம். ஆனாலும் நம்மீது குறை கூற வேண்டும் எப்படியாவது மக்களை இவர்களிடமிருந்து அகற்றிட வேண்டுடம் என்பதற்குத்தான் இந்த மாதிரியான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்,

ஆனால் இவர்களுக்கு தெரியாதது அல்ல இந்த உடைந்த ஆயுதத்திற்கு முன் பல துருப்புடித்த ஆயுதங்களை தவ்ஹீத் ஜமாத் அதன் கூர்மையான வாளால் சந்தித்திருக்கிறது எதிர் கொண்டிருக்கிறது என்பது.

தவ்ஹீத் ஜமாத்தை பொருத்த வரை எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஆலோசனை எல்லாமல் எடுப்பதில்லை. அது மார்க்க விவகாரங்களாக இருந்தாலும் உலக விவகாரங்களாக இருந்தாலும் சரியே.

மார்க்க விவகாரங்களை பொருத்த வரை பீ ஜே அவர்கள் ஒரு கருத்தை வெளியிடுவார். வெளியிடும் தகுதி அவருக்கு இருக்கிறது, பின்னர் அதில் கருத்துவேறு இருந்தால் அதை அவிரிடத்தில் நாங்கள் தெரிவிப்போம்.

மிக அழகான முறையில் அவர் நம்மிடம் அப்படி கருத்துக்கள் ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால் நமக்கு அனுப்பித்தாருங்கள் நான் பரிசீ க்கிறேன் என்று சொல்வார். அதில் வாத பிரதிவாதங்கள் அதிகரித்தால் அதற்கென்று ஒரு ஆய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்வார்.

அதில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை எல்லோறும் ஏற்றுக் கொள்வோம். இன்னும் பேசவேண்டியது உள்ளது என்றால் அதை மீண்டும் ஒரு ஆய்வு செய்வோம்.

இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,. ஸகாத் தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதில் தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள மற்ற அறிஞர்களுகன்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை பல தடவை கடையநல்லூரிலும் சென்னையிலும் உட்கார்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியில் அக்கருத்தை விளக்கி மக்களிடம் ஒரு புத்தகமாக வெளியிட்டார் அந்த புத்தகத்தின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதை பாருங்கள்.

திருக்குர்ஆனையும், நபிவழியையும் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ‘சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் எத்தனை காலம் நடைமுறையில் இருந்தாலும் அது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அமைந்துள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் கடமையும் உரிமையும் உண்டு’ என வலியுறுத்தி வருகின்றது.

அந்த அடிப்படையில் தான், ‘ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா?’ என்பதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

இவ்வாறு ஆய்வு செய்த போது தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியில் ஆரம்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிஞர்கள் மத்தியில் பல்வேறு அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

ஒவ்வொரு கருத்துடையவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆதாரமும், ஒவ்வொரு வாதமும் திறந்த மனதுடன் பரிசீலனை செய்யப்பட்டன.

இறுதியாக, கடந்த 29.08.2005 அன்று கடையநல்லூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ‘ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை’ என்ற கருத்து தான் சரியானது என அனைத்து அறிஞர்களும் ஒத்த கருத்துக்கு வந்தனர்.

அந்த அமர்வில் பி. ஜைனுல் ஆபிதீன், மவ்லவி எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா, மவ்லவி எம். ஷம்சுல்லுஹா, மவ்லவி எம்.ஐ. சுலைமான், மவ்லவி எம்.எஸ். சுலைமான், மவ்லவி பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானி, எஸ். கலீல் ரசூல், பி. அன்வர் பாஷா, மவ்லவி எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரி, மவ்லவி யூசுஃப் ஃபைஜி, மவ்லவி ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி, மவ்லவி கே. அப்துந்நாஸிர், மவ்லவி ஆர். ரஹ்மத்துல்லாஹ், ஏ. ஸய்யது இப்ராஹீம், மவ்லவி எம்.எம். ஸைபுல்லாஹ், மவ்லவி எஸ்.எம். அப்பாஸ், மவ்லவி எஸ். அப்பாஸ் அலீ ஆகியோர் பங்கு கொண்டனர்.

ஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுப்பது அவசியமில்லை என்பது தான் சரியான கருத்து என்றாலும் இந்தக் கருத்தை எடுத்து வைக்கும் போது சில அறிஞர்கள் எடுத்து வைத்த சில வாதங்களும், ஆதாரங்களும் ஏற்புடையதல்ல என்றும் அந்த அமர்வில் சுட்டிக் காட்டப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தவறான இத்தகைய வாதங்களை இனி மேல் எடுத்துக் கூறக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தவிர்க்கப்பட்ட ஆதாரங்கள்

*ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பவர்கள் ஏழையாகி விடுவர்’ என்பன போன்ற காரணங்களைக் கூறக் கூடாது.

*’ஒருவருக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன; ஆயினும் ஒரேயொரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக உள்ளது’ என்று சில அறிஞர்கள் கூறி வந்தனர். ஆனால் ஆய்வின் இறுதியில் அந்த ஒரு ஹதீஸும் பலமானது அல்ல என்பது தான் சரியான நிலை என்றும் முடிவு செய்யப்பட்டது.

* ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற முடிவின் காரணமாக ஜகாத் கடமையான அனைவரும் ஜகாத் கொடுப்பார்கள் என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது. இவ்வாறு அனைவரும் முடிவு செய்தனர்.

அனைவரும் ஒப்புக் கொண்ட ஆதாரங்களையும், வாதங்களையும் தான் நூல் வடிவில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இது குறித்து விமர்சனங்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம். நபீலா பதிப்பகம்

இதே போன்று பீஜே அவர்கள் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லும் போது இப்படி கூறியுள்ளார். அதையும் அப்படியே தருகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் சொத்துக்கள் அனைத்துக்கும் ஜகாத் உண்டு. பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டால் அந்த பணத்தின் மூலம் வாங்கப்படும் சொத்துக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நடக்கும் ஜகாத் கலந்தாய்வு கூட்டத்திற்குப்பின் விரிவாக விளக்கம் வெளியிடப்படும்.

அஜ்மல் 09.01.2010. 01:24 அஸ்ஸலாமு அலைக்கும், தாங்கள் ஜகாத் வருமானத்துக்கா ? எஞ்சியதற்கா ? என்ற கேள்வி பதிலில், நாம் 11 பவுன் நிலையாக வைத்து இருந்தால், வரக்கூடிய அனைத்து வருமானத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கு மாதம் தள் 40,000 வருமானம் வருகிறது. அதில் உணவு, இருப்பிடம் மற்றும் இன்னபிற அத்தியாவசிய தேவைகளுக்காக மாதம் ரூபாய் 20,000 தேவைப்படுகிறது. நான் மொத்த வருமானத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அத்தியாவசிய தேவைகள் போக மீதமுள்ள தள் 20,000திற்கா? மேலும் நான் மாத வருமானம் முழுவதற்கும் ஜகாத் கொடுத்த பிறகு, செலவுகள் போக மீதமுள்ள தொகையில் நகைகள் வாங்கினால் நகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?

அஸ்ஸலாமு அலைக்கும். ஜகாத்தைப் பொருத்தவரை செலவு போக மீதி என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. மாதம் ஐந்து லட்சம் வருமானம் வருபவர் கூட அனைத்தையும் செலவு செய்து விட்டு ஜகாத் கொடுக்காமல் இருக்க முடியும். செலவு போக என்றால் தினசரி செலவு போகவா? மாதச் செலவு போகவா? வருடச் செலவு போகவா என்பது தெளிவில்லாமல் போய்விடும். எனவே வருமானத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதே சரியாகும். ஜகாத் கொடுத்த பின் நகை வாங்கினால் அதற்கு ஜகாத இல்லை. பணத்துக்கு ஜகாத் கொடுத்தாலும் அந்தப் பணத்தால் வாங்கப்பட்ட நகைக்கு ஜகாத் கொடுத்தாலு இரண்டும் சமமானது தான். ஆனாலும் இதில் தவ்ஹித் உலமாக்கள் மத்தியில் சிலருக்கு மாற்றுக் கருத்து உள்ளதால் அடுத்த மாதம் இது கூறித்து கல்ந்தாய்வு கூட்டத்த்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுக்குபின் இது குறித்து விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்

http://onlinepj.com/YQuestion/c_2/

இப்படி மார்க்க ரீதியாக என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதை கலந்து ஆலோசித்து திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் முடிவெடுப்போம். எந்நேரத்திலும் அவரை நாங்கள் பின்பற்றமாட்டோம்.

சில நேரங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கையில் வாத பிரதிவாதாங்கள் நடக்கும் சப்தங்கள் உயரும் ஆனால் அனைத்தையும் பொருமையாக கேட்டுக் கொண்டு பதில் சொல்வார். கோபப்படமாட்டார். இப்படித்தான் அவரும் தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள மற்ற எல்லா அறிஞர்களும் உள்ளனர். பீஜே அவர்ஙகளை தக்லீத் செய்தவர்கள்தான் எதற்கெடுத்தாலும் அண்ணன் அண்ணன் என்று சொன்னலவர்கள்தான் இன்று நம்மை விட்டு வெளியேறிய பின்பு அல்ல வெளியேற்றப்பட்ட பின்பு இப்படி ஒரு அவதூறை சொல்கிறார்.

காலம் வரும் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்கும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இன்ஷா அல்லாஹ்
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved