FLASH NEWS : coming soon ......... -

பாதுகாக்கப் படும் பள்ளிகளும்,பறிபோகும் கொள்கைகளும்.

உலகில் உள்ள மார்க்கங்கள் அனைத்திலும் மிக சரியான அடிப்படைக் கொள்கையைக் கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் என்பதில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அல்லாஹ்வை மாத்திரம் தான் வணங்க வேண்டும்.அவன் அல்லாத யாருக்கும் அடி பணியக் கூடாது.நபி முஹம்மத்(ஸல்)அவா்களைத் தான் பின்பற்ற வேண்டும் அவா்கள் அல்லாத யாரையும் பின்பற்றக் கூடாது.திருக்குா்ஆன் தான் நமது வேதம் அதுவல்லாத எதுவும் நமது வேதமாக முடியாது.

இவைகள் தான் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகள்.

அல்லாஹ்வை வணங்க வேண்டும்.அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது.நபியவா்கள் சொன்ன படி வாழ வேண்டும் அவா்கள் அல்லாதவா்கள் யார் என்ன சொன்னாலும் அது மார்க்கமாக மாறாது என்ற அடிப்படையில் தான் ஏகத்துவப் பிரச்சாரம் தொன்று தொட்டு செய்யப்பட்டு வருகிறது.செய்யப்பட வேண்டும்.

ஏகத்துவப் பிரச்சாரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட தவ்ஹீத் இயக்கங்கள் இன்று அந்தக் கொள்கைக்கு முழுக்குப் போட்டு விடுமளவுக்கு கீழிறங்கி வந்திருப்பதை நாம் காண முடிகிறது.

அதாவது கொள்கை ஒரு பக்கம் தங்களின் சுய விருப்பு,வெருப்புகள் மறு பக்கம்.இப்போது எந்தப் பக்கம் திரும்புவது என்றால் பெரும்பாலான தவ்ஹீத் பேசக் கூடிய,தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவா்கள் இரண்டாவது பகுதிக்குத் தான் திரும்புகிறார்கள்.

சுய விருப்பு,வெருப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இந்தத் தூய கொள்கையை தூர வைத்து விடுவதைக் கண்கூடாக காண முடிகிறது.

பாதுகாக்கப் படும் பள்ளிகளும்,பரி போகும் கொள்கைகளும்.

தவ்ஹீ்த் பிரச்சாரம் ஆரம்பித்த காலத்தில் அடி பட்டேனும் கொள்கையை முன் வைப்போம்,உயிர் போனாலும் கொள்கையை விடோம் என்றிருந்த பல கொள்கை வாதிகள் இன்று வந்த வழியிலேயே பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு ஊரிலும் ஆரம்ப கட்ட தவ்ஹீத் பிரச்சாரம் மிக வீரியமாகவும்,தூய்மையானதாகவும் காணப்படுகிறது.

இதே நேரம் காலப் போக்கில் தவ்ஹீத் இயக்கங்கள் என்று தங்களை அறிமுகப் படுத்தியுள்ள சவுதிப் பண இயக்கங்களிடம் சென்று எங்களுக்கு ஒரு பள்ளியை கட்டித் தாருங்கள் என்று கேட்கும் போது அவர்களும் பள்ளியை கட்டிக் கொடுக்கிறார்கள்.

பிற்பாடு என்ன நடக்கிறது என்றால் கொண்ட கொள்கையை விட பள்ளி தான் முக்கியம்.

பள்ளியின் நிர்வாகிகளாக யார் இருப்பது? கொள்கையை உடைத்துச் சொன்னால் பள்ளியை உடைத்து விடுவார்கள் அதனால் கொள்கையில் விட்டுக் கொடுத்தாலும்,கொடுப்போம்.பள்ளி நிர்வாகத்திலோ பள்ளியின் மற்ற விஷயங்களிலோ விட்டுக் கொடோம் என்று பல நிர்வாகிகள் தவ்ஹீத் கொள்கைக்கு முழுக்கு போட்டு தவ்ஹீத் என்ற பெயரில் ஜமாத்தே இஸ்லாமியாக மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.


நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(2:208)


மார்க்கத்தில் அரை,குரையாக நுழைந்து விட்டு முழுமையாக இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவா்களுக்குத் தான் இறைவன் இந்த வசனத்தின் மூலம் சாட்டையடி கொடுக்கிறான்.

கொள்கையில் சிறு அளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்த எத்தனையோ சகோதரர்கள் இன்று தமது கொள்கைக்கு தாமே எதிரிகளாக மாறியிருப்பதை காண்கிறோம்.

அன்பின் சகோதரர்களே! இறைவனை தூய்மையாக வணங்கும் நோக்கத்தில் பள்ளிகளை நாம் கட்டினால் அதனை பாதுகாக்கும் பொருப்பு அல்லாஹ்வைச் சாறும் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இதே நேரம் நமது கொள்கையில்,தெளிவாகவும்,சரியாகவும்,இருப்பது நமது கடமை.

பள்ளிக்காக கொள்கையை விட்டுக் கொடுத்துவிடாமல்,கொள்கையில் உறுதியாக இருந்து மறுமையில் வெற்றி பெருவோமாக!


நன்றி : rasminmisc
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved