அசத்தியத்திற்கு ஆதரவாக ஒரு ஜமாலி... சத்தியத்திற்குத் துணையாக பல ஜமாலிகள்...
அல்லாஹ்வின் பேரருளால் அசத்தியவாதிகளின் முகத்திரையைக் கிழிப்பதற்காக அனல் பறக்கும் விவாதம் சென்னையில் (24-10-2010) நடைபெற்றுக்கொண்டிருக்கையில் திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் 24-10-2010 அன்று மாலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல ஆண்டு காலம் மத்ஹாப் கொள்கையை பிரச்சாரம் செய்தவரும், ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கொகையான நிரந்தர நரகத்திற்கு இழுத்துச்செல்லும் சமாதி வழிபாட்டிற்கு வக்காலத்து வாங்கியவருமான சகோ ஜாபர் ஜமாலி அவர்கள் சத்தியக்கொள்கையான தவ்ஹீத் கொள்கையின் பக்கம் தான் வந்துவிட்டதாக செயல்வீரர்கள் மத்தியில் சூளுரைத்தார்.அல்ஹம்துலில்லாஹ்! அத்துடன் ஷேக் அப்துல்லாஹ் கொள்கையான சமாதி வழிபாட்டுக் கொள்கையை வேரடிமன்னோடு புதைப்பதற்கும், மரணம் நிகழும் வரை ஏகத்துவக்கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய இந்த நிமிடத்திலிருந்து 'தான்' புரப்பட்டுவிட்டதாகவும், "செயல்வீரர்களின் அரங்கம் அதிரும் தக்பீர்களுக்கு மத்தியில்" சூளுரைத்தார். சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். --
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே