FLASH NEWS : coming soon ......... -

அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது. இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.



இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ளது அயோத்தி. இங்கு இருந்த பாபர் மசூதி, கடந்த 1992ம் ஆண்டு இந்து அமைப்புகளும், பா.ஜ.வும் நடத்திய இரத்த சேவையால் இடிக்கப்பட்டது.


அப்போது முதல் இந்த பிரச்னை தேசிய பிரச்னையாகி விட்டது. இந்த இடத்தின் மொத்த பரப்பளவு 2.77 ஏக்கர். இங்கு முதலில் இருந்தது பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா? என்ற சர்ச்சையும், இந்த இடம் சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு சொந்தமா? அல்லது அகில பாரதிய இந்து மகாசபைக்கு சொந்தமா? என்ற சர்ச்சையும் 1949ம் ஆண்டில் இருந்து நீடிக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கடந்த 24ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது


இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதால், தீர்ப்பை ஒத்திவைக்கும்படி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி மனு தாக்கல் செய்தார். அதை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் சிறப்பு மனுவை தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் ரவீந்திரன், எச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கடந்த 23ம் தேதி விசாரித்தது.



மனுவை தள்ளுபடி செய்யலாம் என நீதிபதி ரவீந்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு கடைசி வாய்ப்பு அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என்று நீதிபதி கோகலே கூறினார். இதன்பின், வழக்கு தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான 3 நீதிபதி பெஞ்ச் முன்பாக மாற்றப்பட்டது. ‘இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வாய்ப்பு இல்லை. எனவே, தீர்ப்பை ஒத்திவைக்கக் கூடாது’ என்று வழக்கின் முக்கிய மனுதாரர்களான சன்னி மத்திய வக்பு வாரியமும், அகில பாரத இந்து மகாசபாவும் தெரிவித்தன. நிர்மோகி அகாரா அமைப்பு மட்டும், Ôபேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வசதியாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க 3 மாதம் தடை விதிக்க வேண்டும்Õ என்று வலியுறுத்தியது. இந்நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டரை மணி நேரம் வாதங்கள் நடந்தன. பின்னர், மதியம் 2 மணிக்கு தீர்ப்பு கூறப்பட்டது.


தலைமை நீதிபதி கபாடியா வாசித்த தீர்ப்பில், ‘அனைத்து தரப்பினரின் வாதத்தையும் பரிசீலித்து, இந்த மனுவை தள்ளுபடி செய்யலாம் என எல்லா நீதிபதிகளும் ஒருமனதாக கருதுகிறோம். அதன்படி, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றார். இதன் மூலம், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே வெளியிட்ட அறிவிப்பில், ‘அயோத்தி வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி மாலை 3.30க்கு தீர்ப்பு அளிக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. தீர்ப்புக்குப் பிறகு கலவரம் ஏற்படுவதை தடுக்க, எல்லா மாநிலங்களிலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


இத்தனை நாள் என்ன செய்தீர்கள்?


அயோத்தி வழக்கு தீர்ப்பை ஒத்திவைக்க கோரி, மனு தாக்கல் செய்த ஓய்வு பெற்ற அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வக்கீல் முகுல் ரோஹத்கி ஒன்றரை மணி நேரம் வாதாடினார். அவர், ‘பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வாய்ப்பு தரும் வகையில், தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி கபாடியா, ‘‘50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் விழித்திருக்கிறீர்கள். இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்’’ என்று கண்டித்தார்.


தள்ளுபடி செய்ததற்கு காரணம் இல்லை


[B]உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி, ரமேஷ் சந்த் திரிபாதியின் வக்கீல் முகுல் ரோஹத்கி கூறியதாவது[/B]: மனுவை தள்ளுபடி செய்ததற்கான ஒரு காரணத்தை கூட உச்ச நீதிமன்றம் கூறவில்லை. இருப்பினும், இந்த பிரச்னை இத்துடன் முடிந்து விட்டது. அது பற்றி மேலும் கருத்து கூற நான் விரும்பவில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். அதை பரிசீலிக்க வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. அந்த வகையில் பார்த்தால், குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது இப்போதுள்ள நிச்சயமற்ற நிலை தொடரும் ’ என்றார்.





எது எப்படியோ? பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
அதை இடித்த பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். அது நடக்கும் வரை முஸ்லிம்கள் ஓய
மாட்டோம் .ஓயவே மாட்டோம். நன்றி :
Islamic DVD
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved