FLASH NEWS : coming soon ......... -

மகளை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்!

மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட கலெக்டராக உள்ளவர். அனந்தகுமார். இவருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அனந்தக்குமார் மனைவி ஸ்ரீவித்யா தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். தர்மபுரியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் முதல் வகுப்பு படித்த இவர்களது மூத்த மகள் கோபிகாவை தற்போது அரசு தொடக்கப் பள்ளியில் அனந்தகுமார் சேர்த்துள்ளார்.

ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது மகளை 2ம் வகுப்பில் மாவட்ட ஆட்சியர் சேர்த்தார். 15.06.2011 அன்று ஆட்சியர் அனந்த குமார் குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகளுடன் சென்றார். மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வந்ததை கண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓடி வந்தார். மற்ற ஆசிரியர் ஆசிரியைகளும் அங்கு வந்தனர். அவர்கள் ஆட்சியரை வரவேற்றனர். என் மகளை இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்க்கிறேன் என்று அனந்தகுமார் கூறினார்.

பிறகு அவர் ஆட்சியர் அனந்த குமாரை தான் அமரும் இருக்கையில் அமரச் சொன்னார். ஆனால் அதில் அமர மறுத்த அவர் பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து தனது மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் சேர்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கூட தங்களது பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு கிடைக்க மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் இந்த காலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஏழை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


thanks to : inneram

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved